தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை 150120 புதன் மறைக்கல்வி உரை 150120 

நற்செய்தியைப் பறைசாற்றுவதில் துணிவும், மகிழ்வும் பெற...

"நற்செய்தியை அறிவிப்பவர்களாக அழைக்கப்பட்டுள்ள நாம், அப்பணியை, துணிவோடும், மகிழ்வோடும் ஆற்றுவதற்கு, தூய ஆவியார் நம்மில் புத்துணர்வளிப்பாராக" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தூதர் பணிகள் நூலை மையப்படுத்தி தான் வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைகளை, சனவரி 15, இப்புதனன்று நிறைவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூல் வெளிப்படுத்தும் மகிழ்வையும், துணிவையும் தன் டுவிட்டர் செய்தியின் கருத்தாக வெளியிட்டார்.

நற்செய்தி இவ்வுலகில் எவ்விதம் பரவியது என்ற வரலாற்றை, கடந்த சில மாதங்களாக, பின்னோக்கிப் பார்த்த நாம், அந்த நற்செய்தியை தொடர்ந்து பறைசாற்றும் பணியாளர்களாக நம்மை மாற்றும்படி தூய ஆவியாரை வேண்டுவோமாக என்று தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை, அதே எண்ணங்களை தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டார்.

"நற்செய்தியை அறிவிப்பவர்களாக அழைக்கப்பட்டுள்ள நாம், அப்பணியை, துணிவோடும், மகிழ்வோடும் ஆற்றுவதற்கு, தூய ஆவியார் நம்மில் புத்துணர்வளிப்பாராக" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார், திருத்தந்தை.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

சனவரி 15, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2.306 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 830 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 65 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2020, 15:10