தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உண்மையான சந்திப்பின் கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட..

இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் கத்தோலிக்க கல்வி பணிக்குழு, "தலைமைத்துவம், சமூகத்தொடர்பு மற்றும், விறப்னை" என்ற தலைப்பில், சந்தியாகோ நகரில் 26வது கத்தோலிக்க கல்வி மாநாடு நடைபெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிலே நாட்டில் நடைபெற்ற, இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க கல்வி அமைப்பின் 26வது மாநாட்டிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க கல்வியில், உண்மையான சந்திப்பின் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

சிலே நாட்டின் சந்தியாகோ நகரில் சனவரி 8, இப்புதனன்று தொடங்கிய மூன்று நாள் மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில், இன்றைய நம் காலத்தில் கத்தோலிக்க கல்வி, எல்லாருக்கும் நம்பிக்கையை ஊட்டுவதாக அமைகின்றது என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

சனவரி 10, இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இந்த மாநாட்டிற்கு, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் சந்திப்புகள்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 10, இவ்வெள்ளியன்று உலகளாவிய கத்தோலிக்க பெண்கள் அமைப்பின் (UMOFC) பிரதிநிதிகளையும், உரோம் நகரிலுள்ள இலத்தீன் அமெரிக்க பாப்பிறை கல்லூரியின் இயேசு சபை குழுமத்தினரையும் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருப்பீட விசுவாச கோட்பாட்டு பேராயத் தலைவர் கர்தினால் Luis Francisco Ladaria Ferrer அவர்களையும், ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Gabriele Giordano Caccia அவர்களையும், உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிரிஸ்தவ சபையின் பங்குத்தந்தை Michael Jonas அவர்களையும் சனவரி 10, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2020, 15:05