சீனப் புத்தாண்டுக்கு தயாரிப்புகள் சீனப் புத்தாண்டுக்கு தயாரிப்புகள்  

சீனப் புத்தாண்டுக்கு திருத்தந்தை நல்வாழ்த்து

சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள், எலி ஆண்டு என, 2020ம் புத்தாண்டை வருகிற சனிக்கிழமையன்று, துவங்குகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சனவரி 22, இப்புதன் காலையில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் மற்றும், பயணிகளுக்கு, மறைக்கல்வியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுரைக்குப்பின்,  சனவரி 25, வருகிற சனிக்கிழமையன்று புத்தாண்டை சிறப்பிக்கும் அனைத்து நாடுகளின் மக்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வருகிற சனிக்கிழமையன்று, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல இலட்சக்கணக்கான மக்கள், புத்தாண்டை கொண்டாடவுள்ளனர், அவர்கள் எள்லாருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டார், திருத்தந்தை.

இவ்வுலகில் அமைதி நிலவ செபிக்குமாறும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புத்தாண்டை சிறப்பிக்கும் இவ்வேளையில், ஒவ்வொரு குடும்பமும், கற்பித்தல், விருந்தோம்பல், ஞானம், பிறரை மதித்தல், மற்றும், படைத்த இறைவனுடன் இணைக்க வாழ்வு, ஆகியவைகளுடன் வாழுமாறு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என மேலும் கூறினார்.

மேலும், எக்காலத்தையும்விட இக்காலத்தில் இவ்வுலகிற்கு அதிகம் அதிகமாக தேவைப்படும் அமைதி, கருத்துப்பரிமாற்றம், நாடுகளிடையே ஒருமைப்பாடு ஆகியவைகளுக்காக அனைவரும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகள், எலி ஆண்டு என, 2020ம் புத்தாண்டை வருகிற சனிக்கிழமையன்று, துவங்குகின்றனர். சீன இராசிபலன்களின் 12 விலங்குகளை மையப்படுத்தி இப்புத்தாண்டு பெயரிடப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2020, 13:22