Brumandinho நீர்த்தேக்க விபத்தின் முதலாண்டு நினைவு Brumandinho நீர்த்தேக்க விபத்தின் முதலாண்டு நினைவு 

பிரேசில் அணை விபத்து நினைவு நாளுக்கு செய்தி

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பழுதுபார்க்கவும், அதைப் பாதுகாக்கவும் உதவுமாறு, புனித பவுலின் பரிந்துரையை இறைஞ்சுவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஓராண்டிற்குமுன், பிரேசில் நாட்டின் Brumandinho நீர்த்தேக்க விபத்தில் உயிரிழந்த 272 பேரை நினைத்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2019ம் ஆண்டு சனவரி மாதம் 25ம் தேதி இடம்பெற்ற இந்த விபத்தை நினைத்து, பிரேசில் நாட்டு மக்களுக்கு, சனவரி 25,  இச்சனிக்கிழமையன்று காணொளி செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விபத்தில் பலியானவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றும், துன்புறும் அனைவருக்கும் நம் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பழுதுபார்க்கவும், அதைப் பாதுகாக்கவும் உதவுமாறு, புனித பவுலின் பரிந்துரையை இறைஞ்சுவோம் என்றும், திருத்தந்தை அக்காணொளி செய்தியில் கூறியுள்ளார்.  

பிரேசில் நாட்டு Giant Vale சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நீர்த்தேக்கம், மதிய உணவு நேரத்தில் உடைந்ததில் 272 பேர் உயிரிழந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2020, 16:06