மாடடைக் குடிலில் திருக்குடும்பம் மாடடைக் குடிலில் திருக்குடும்பம் 

உறவுகளின் தரத்தால், வாழ்வு, முக்கியத்துவம் பெறுகிறது

திருக்குடும்பத்தின் கரங்களில் இவ்வுலகின் அனைத்துக் குடும்பங்களையும், குறிப்பாக, சிரமங்களாலும், மனத்துயரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஒப்படைப்போம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வில் எளிமையின் அவசியத்தை நமக்கு கிறிஸ்மஸ் குடில் கற்றுத்தருகிறது என்ற கருத்தை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை, டிசம்பர் 30, இத்திங்களன்று வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொண்டிருக்கும் பொருட்களின் எண்ணிக்கைகளால் அல்ல, மாறாக, உறவுகளின் தரத்தைக் கொண்டே வாழ்வு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, கிறிஸ்மஸ் குடில் காட்சியின் உண்மையான எளிமை நினைவூட்டுகிறது. உடைமைகளில் ஏழையாகவும், அன்பில் வளமுடையவராகவும் இருக்கும் இறைவனை நோக்கி நம் பார்வையைத் திருப்பும்போது, வாழ்வில் எது முக்கியமானது என்பது நினைவுக்கு வருகிறது, என உரைக்கிறது, திருத்தந்தையின் திங்கள் தின டுவிட்டர் செய்தி.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'இன்று திருக்குடும்பத்தின் கரங்களில் இவ்வுலகின் அனைத்துக் குடும்பங்களையும் ஒப்படைப்போம், குறிப்பாக, சிரமங்களாலும், மனத்துயரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஒப்படைத்து, அவர்கள் மீது இறைபாதுகாப்பை இறைஞ்சுவோம்’, என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2019, 15:06