தேடுதல்

Vatican News
Amitié France Italie கழகத்தினர் கொணர்ந்த பனத்தோனையை ஆசீர்வதிக்கிறார் Amitié France Italie கழகத்தினர் கொணர்ந்த பனத்தோனையை ஆசீர்வதிக்கிறார்   (Vatican Media)

நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டின் தலைநகர் புவனஸ் அயிரஸ் நகரில், 1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி பிறந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

டிசம்பர் 18, இப்புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைத்து மக்களுக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அதாவது, கடந்த வாரம்,  தன் அருள்பணி வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கும், இச்செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட தன் 83வது பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் தன் நன்றியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். குறிப்பாக இவ்விரு நாட்களில், தனக்கு செபம் எனும் கொடையை வழங்கியமைக்காக நனறியை வெளியிடுவதாக தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அர்ஜென்டீனாவின் தலைநகர் புவனஸ் அயிரஸ் நகரில் 1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி பிறந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய்க்கிழமையன்று 83ம் வயதை நிறைவு செய்தார். இவர், இயேசு சபை அருள்பணியாளராக 1969ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அருள்பொழிவு செய்யப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு, டிசம்பர் 13, கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது.

18 December 2019, 14:59