தேடுதல்

Vatican News
ஈராக் நாட்டில்  எதிர்ப்பு போராட்டங்கள் ஈராக் நாட்டில் எதிர்ப்பு போராட்டங்கள்   (AFP or licensors)

ஈராக் நாட்டின் அமைதிக்காக திருத்தந்தையின் விண்ணப்பம்

ஈராக் நாட்டில் அமைதியும், இணக்கவாழ்வும் நிலவ இறைவனிடம் செபிக்கும்படி, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கியபின், இறுதியில், ஈராக்கின் இன்றைய நிலைகள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, ஈராக்கில் நிகழ்ந்துள்ள அண்மைய எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தும், போராட்டம் செய்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும், ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறினார்.

இந்த வன்முறைகளில் இறந்தோர், மற்றும் காயமுற்றோர் அனைவருக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் அமைதியும், இணக்கவாழ்வும் நிலவ இறைவனிடம் செபிக்கும்படி புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வுக்குரிய திருப்பீட அவை, இளையோருக்கென அனைத்துலக ஆலோசனை அவை ஒன்றை 20 இளையோருடன் உருவாக்கியுள்ளது குறித்து, திருத்தந்தை தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

02 December 2019, 15:26