தேடுதல்

குடில்களின் கண்காட்சியை பார்வையிட்ட திருத்தந்தை குடில்களின் கண்காட்சியை பார்வையிட்ட திருத்தந்தை 

திருத்தந்தை பார்வையிட்ட 'நூறு குடில்கள்'

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திற்கு சற்று தூரத்தில் அமைந்துள்ள, பத்தாம் பயஸ் அரங்கில் வைக்கப்பட்டுள்ள நூறு குடில்களின் கண்காட்சியை திருத்தந்தை பார்வையிட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்  செய்திகள்

'வத்திக்கானில் நூறு குடில்கள்' என்ற தலைப்பில், வத்திக்கான் நகரின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடில்களின் கண்காட்சியை, டிசம்பர் 9, இத்திங்கள் மாலை சென்று பார்வையிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திற்கு சற்று தூரத்தில், பத்தாம் பயஸ் அரங்கில் வைக்கப்பட்டுள்ள இந்த நூறு குடில்களின் கண்காட்சியை திருத்தந்தை சென்று சந்தித்தது, இம்மாதம் முதல் தேதி இத்தாலியின் Greccio நகரில் முதல் குடில் உருவாக்கப்பட்ட இடத்தை அவர் சென்று சந்தித்து, குடிலின் முக்கியத்துவம் குறித்த அப்போஸ்தலிக்க ஏடு ஒன்றை வெளியிட்டதற்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.

இந்த குடில் கண்காட்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்வையிடச் சென்றவேளையில், புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர், ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், திருத்தந்தையை வரவேற்று, ஒவ்வொரு குடிலின் பின்னணி குறித்து விளக்கிக் கூறினார்.

இக்குடில்களை உருவாக்கிய கலைஞர்களையும், பத்தாம் பயஸ் அரங்கில் சந்தித்து, தன் வாழ்த்தையும், ஆசீரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2019, 16:14