தேடுதல்

பிரெஞ்ச் கத்தோலிக்க இளம் தொழில் முனைவோரிடம் திருத்தந்தை பிரெஞ்ச் கத்தோலிக்க இளம் தொழில் முனைவோரிடம் திருத்தந்தை 

நற்செய்தி மதிப்பீடுகள் வாழ்வில் கடைபிடிக்கவல்லவையே

இளம் கத்தோலிக்க தொழில்முனைவோர், தங்களுடைய தனிப்பட்ட வாழ்வு வழியாகவும், பணி நடவடிக்கைகள் வழியாகவும் நற்செய்தி மதிப்பீடுகளுக்கு சாட்சியம் வழங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகமயமாக்கல் மற்றும் வியாபாரச் சட்டங்களினால் நெருக்கப்பட்டிருக்கும் இன்றைய உலகில், தொழில் நிறுவனங்களை எடுத்து நடத்தும் இளையோர், கிறிஸ்தவ சாட்சிகளாக செயல்படுவது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த ஏறத்தாழ 300 கத்தோலிக்க இளம் தொழில் முனைவோரை, வத்திக்கானில், இத்திங்கள் காலை சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுடைய தனிப்பட்ட வாழ்வு வழியாகவும், பணி நடவடிக்கைகள் வழியாகவும், இவர்கள், நற்செய்தி மதிப்பீடுகளுக்கு சாட்சியம் வழங்கி வருவது குறித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இவ்வுலகில் பெரும் பொறுப்புகளைக் கொண்டுள்ள ஒருவர், கிறிஸ்தவராக வாழ்வது அவ்வளவு எளிதல்ல என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கடவுளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் ஓர் உலகை, கிறிஸ்துவுடன் இணைந்து மீட்க நினைப்பது, மறைசாட்சிய மரணத்திற்கு இட்டுச்செல்லலாம் என எடுத்துரைத்தார்.

இவ்வுலகின் அதிகாரம், மற்றும், பணத்திற்கு முன்னால், நற்செய்தி என்பது பல வேளைகளில் பலவீனமுடையதாக தோற்றமளித்தாலும், தூயஆவியாரின் சக்தியாலும், மறைப்பணியாளர்களின் துணிச்சல்மிகு சாட்சியத்தாலும் நற்செய்தி மதிப்பீடுகள் வாழ்வில் உண்மையாக முடியும் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2019, 15:38