தேடுதல்

இத்தாலிய தேசிய நிதி நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் இத்தாலிய தேசிய நிதி நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் 

இத்தாலிய தேசிய நிதி நிறுவனத்தை பாராட்டிய திருத்தந்தை

அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படும் சூழலில், நீதியை மையப்படுத்தி, இத்தாலிய தேசிய நிதி நிறுவனம் பணியாற்றுவதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலாபம் ஒன்றையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்வுலக பொருளாதாரத்தில், பணியை மையப்படுத்தி செயலாற்றும் இத்தாலிய தேசிய நிதி நிறுவனத்தை தான் வாழ்த்துவதாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1919ம் ஆண்டு, உரோம் நகரில் உருவாக்கப்பட்ட இத்தாலிய தேசிய நிதி நிறுவனம், தன் முதல் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிவரும் வேளையில், இந்நிறுவனத்தின் பொறுப்பாளர்கள், டிசம்பர் 6, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், இந்நிறுவனத்தின் நூறாண்டு பணிகளை திருத்தந்தை பாராட்டினார்.

அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படும் சூழலில், நீதியை மையப்படுத்தி, இத்தாலிய தேசிய நிதி நிறுவனம் பணியாற்றுவதையும், மக்களுக்கு, குறிப்பாக, பணி ஒய்வு பெற்றவர்களுக்குச் சேரவேண்டியதை பெற்றுத் தருவதில் கருத்தாய் இருப்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.

மனிதர் ஒவ்வொருவரும் மாண்புக்குரியவர் என்ற உண்மையை அடித்தளமாகக் கொண்டு செயலாற்றும்போதுதான், நீதியும், நேர்மையும், நம் நிதி நிறுவனங்களில் உறுதியாகும் என்பதையும், திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2019, 14:57