தேடுதல்

Vatican News
கிறிஸ்மஸ் நள்ளிரவுத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் கிறிஸ்மஸ் நள்ளிரவுத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (@Vatican Media)

திருத்தந்தையின் கிறிஸ்மஸ், புத்தாண்டு வழிபாட்டு நிகழ்வுகள்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா மற்றும் புத்தாண்டு ஆகிய விழாக்களையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருவழிபாட்டு நிகழ்வுகளை, திருப்பீட வழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா மற்றும் புத்தாண்டு ஆகிய விழாக்களையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருவழிபாட்டு நிகழ்வுகளை, திருப்பீட வழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.

டிசம்பர் 24, செவ்வாய் இரவு 9.30 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலியைத் தலைமையேற்று நடத்துவார்.

டிசம்பர் 25, புதன், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, மதியம் 12 மணிக்கு, புனித பேதுரு வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து, 'ஊருக்கும், உலகுக்கும்' என்று பொருள்படும், 'Urbi et Orbi' சிறப்புச் செய்தியையும், சிறப்பு ஆசீரையும் திருத்தந்தை வழங்குவார்.

டிசம்பர் 31, ஆண்டின் இறுதிநாளன்று, மாலையில், புனித பேதுரு பெருங்கோவிலில், 'தே தேயும்' என்ற நன்றி வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறுநாள், புத்தாண்டு நாளன்று சிறப்பிக்கப்படும் மரியா, இறைவனின் தாய் என்ற பெருவிழாவையொட்டி, அதே பெருங்கோவிலில், காலை 10 மணிக்கு திருப்பலியை நிறைவேற்றுவார்.

சனவரி 6, திங்களன்று கொண்டாடப்படும் திருக்காட்சி பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலில், காலை 10 மணிக்கு சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை.

12 December 2019, 15:56