தேடுதல்

தீயணைப்புப் படையினருக்காக செபிக்கும் திருத்தந்தை தீயணைப்புப் படையினருக்காக செபிக்கும் திருத்தந்தை 

தீயணைப்புப் படையினருக்காக செபிக்கும் திருத்தந்தை

வத்திக்கானில் இயங்கும் தீயணைப்பு படையினருக்கென வழங்கப்பட்ட ஒரு புதிய வாகனத்தை ஆசீர்வதித்த திருத்தந்தை, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் அனைவருக்காகவும் தான் தினமும் செபித்து வருவதாகக் குறிப்பிட்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மரணத்தையும் மறுவாழ்வையும் நினைவுறுத்தும் நவம்பர் மாதத்தின் மையக்கருத்துக்களை உள்ளடக்கிய மற்றுமொரு டுவிட்டர் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 7, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

"கிறிஸ்தவின் ஒளியால் உயிரூட்டம் பெரும் கிறிஸ்தவ நம்பிக்கை, இவ்வுலகின் மிகவும் ஆழ்ந்த இருள் சூழ்ந்த இரவுகளிலும், வாழ்வு மற்றும் உயிர்ப்பின் ஒளியை வீசச் செய்கின்றது" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

மேலும், நவம்பர் 6, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையை வழங்கச் செல்லும் வழியில், சாந்தா மார்த்தா இல்லத்திற்கு முன், தீயணைப்புப் படையைச் சார்ந்த சிலரைச் சந்தித்து ஆசீர் வழங்கினார்.

வத்திக்கானில் இயங்கும் தீயணைப்பு படையினருக்கென வழங்கப்பட்ட ஒரு புதிய வாகனத்தை ஆசீர்வதித்த திருத்தந்தை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் அனைவருக்காகவும் தான் தினமும் செபித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாயன்று, வட இத்தாலியின் Piedmont பகுதியில் நள்ளிரவில் வந்த ஒரு அவசர உதவி அழைப்பை ஏற்று விரைந்த தீயணைப்பு படையினரில் மூன்று பேர், அப்பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்ததை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பாக நினைவுகூர்ந்து, அவர்களுக்காக செபித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2019, 14:58