தேடுதல்

Vatican News
வத்திக்கான் நிதிவிவரங்கள் துறையின் தலைவர் கார்மேலோ பார்பகால்லோ வத்திக்கான் நிதிவிவரங்கள் துறையின் தலைவர் கார்மேலோ பார்பகால்லோ 

வத்திக்கான் நிதிவிவரங்கள் துறையின் புதியத் தலைவர்

"உங்களைவிட வேறுபட்டு சிந்திப்போராக இருந்தாலும், அவர்களுடன் நட்பில் வளர முயற்சி செய்யுங்கள், அவ்வழியே, வரலாற்றை மாற்றியமைக்கும் மிகச்சிறந்த கருவியான ஒருங்கிணைப்பு உங்களிடையே வளரும்" – திருத்தந்தையின் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உறவுகளை வளர்க்க நாம் கற்றுக்கொண்டால், உலக வரலாற்றை மாற்றியமைக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 28, இவ்வியாழனன்று, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"அயலவரை நோக்கி கரங்களை நீட்டவும், நட்புறவு கொள்ளவும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்! உங்களைவிட வேறுபட்டு சிந்திப்போராக இருந்தாலும், அவர்களுடன் நட்பில் வளர முயற்சி செய்யுங்கள், அவ்வழியே, வரலாற்றை மாற்றியமைக்கும் மிகச்சிறந்த கருவியான ஒருங்கிணைப்பு உங்களிடையே வளரும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், இத்தாலிய வங்கியில் பணியாற்றிவந்த திருவாளர் கார்மேலோ பார்பகால்லோ (Carmelo Barbagallo) அவர்களை, வத்திக்கான் நிதிவிவரங்கள் துறையின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

இதுவரை இத்துறையின் தலைவராகப் பணியாற்றிய திருவாளர் Rene Brülhart அவர்களின் பதவிக்காலம், கடந்த வாரம் நிறைவடைந்ததையடுத்து, நவம்பர் 27 இப்புதனன்று, 63 வயதான பார்பகால்லோ அவர்களை திருத்தந்தை, இப்பொறுப்பில் நியமித்துள்ளார்.

28 November 2019, 14:45