தேடுதல்

Vatican News
நற்செய்தி அறிவிப்பு குழுக்கள் நற்செய்தி அறிவிப்பு குழுக்கள்  (Vatican Media)

வாழ்வுக்கு உயிரூட்டம் வழங்கும் நற்செய்தி அறிவிப்பு குழுக்கள்

திருத்தந்தை : கனி தந்து, அதில் நிலைத்திருங்கள் என்ற இயேசுவின் எதிர்பார்ப்பினின்று எந்த கிறிஸ்தவரும் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தி அறிவிப்பதற்குரிய பங்குத்தள குழுக்கள் என்ற அமைப்பு, முப்பதாண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் இன்று பணியாற்றி வருவது குறித்து, தன் மகிழ்ச்சியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Don Piergiogio Perini என்ற அருள்பணியாளரால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று நல்ல கனிகளைக் கொணர்ந்துள்ளதைக் காணமுடிகிறது என, தன்னை சந்திக்க வந்திருந்த இந்த அமைப்பினரிடம் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன் என்ற இயேசுவின் எதிர்பார்ப்பினின்று எந்த கிறிஸ்தவரும் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது என்று கூறினார்.

நாம் நமக்கு பணிக்கப்பட்ட பணிகளை ஆற்றியபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள், எங்கள் கடமையைத்தான் செய்தோம், என சொல்லுங்கள் எனக் கூறிய இயேசுவே, 'தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளருக்கு, தலைவரே பணிவிடை செய்வார்’ என்று கூறியதையும் நினைவூட்டிய திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஆர்வம் குன்றாமல், சோர்வடையாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டியதைச் சுட்டிக்காட்டினார்.

பங்குதள சமூகங்களில் மக்களின் வாழ்வுக்கு உயிரூட்டம் வழங்கும்படியாகவும், அவர்களை ஆழமாகத் தொடும்படியாகவும், நம் நடவடிக்கைகள் வழியாக உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

18 November 2019, 16:32