தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் சைப்ரஸ் அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சைப்ரஸ் அரசுத்தலைவர்   (Vatican Media)

திருத்தந்தையுடன் சைப்ரஸ் அரசுத்தலைவர் சந்திப்பு

புலம்பெயர்ந்தோர் வரவேற்பு, மதவிடுதலை, சிறுபான்மையினர் உரிமைகள், அமைதியை ஊக்குவித்தல் போன்றவை குறித்து உரையாடல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சைப்ரஸ் நாட்டின் அரசுத்தலைவர் Nicos Anastasiades அவர்கள், இத்திங்கள் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடன் சைப்ரஸ் அரசுத்தலைவர் மேற்கொண்ட சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பின்போது, சைப்ரஸுக்கும் வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவு, சைப்ரஸின் இன்றைய நிலை, அந்நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றிணைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

புலம்பெயர்ந்தோர் வரவேற்பு, மதவிடுதலை, சிறுபான்மையினர் உரிமைகள், அமைதியை ஊக்குவித்தல், கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியின் இன்றைய நிலைகள் போன்றவை குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன

18 November 2019, 16:21