திருத்தந்தையை சந்தித்த அங்கோலா அரசுத் தலைவரும் அவர் மனைவியும் திருத்தந்தையை சந்தித்த அங்கோலா அரசுத் தலைவரும் அவர் மனைவியும் 

திருத்தந்தை பிரான்சிஸ், அங்கோலா அரசுத்தலைவர் சந்திப்பு

ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள அங்கோலா நாடு, அக்கண்டத்தின் ஏழாவது பெரிய நாடாகும்.19ம் நூற்றாண்டில் போர்த்துக்கல் காலனியாக மாறிய அங்கோலா, 1975ம் ஆண்டில் விடுதலையடைந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அங்கோலா அரசுத்தலைவர் João Manuel Gonçalves Lourenço அவர்கள், நவம்பர் 12, இச்செவ்வாய் காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

அதேநேரம், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி Mirosław Stanisław Wachowski அவர்கள், அங்கோலா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் Manuel Domingos Augusto அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அங்கோலா குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், அந்நாட்டின் பல்வேறு துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் மதிப்புமிக்க பணிகள், குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில், திருப்பீடத்திற்கும், அங்கோலாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் சில கூறுகள் போன்றவை, இச்சந்திப்புக்கள் இடம்பெற்றன. மேலும், அங்கோலாவின் இப்போதைய நிலைமை பற்றிய உரையாடல்களில், நாட்டின் முன்னேற்றம், சமுதாய அமைதியைக் காத்தல் ஆகியவற்றில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பற்றி, இத்தலைவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

FAO இயக்குனர் சந்திப்பு

மேலும், நவம்பர் 12, இச்செவ்வாய் காலையில், FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பின் இயக்குனர் Qu Dongyu அவர்களையும், அவருடன் சென்ற பிரதிநிதிகளையும் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2019, 14:43