நவம்பர் 29, வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகர் காரித்தாஸ் மையம் செல்கிறார் நவம்பர் 29, வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகர் காரித்தாஸ் மையம் செல்கிறார் 

உரோம் காரித்தாஸ் மையம் செல்லும் திருத்தந்தை

உரோம் காரித்தாஸ் மையம் தன் 40ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மையத்திற்கு, நவம்பர் 29, மாலை 4 மணியளவில் செல்கிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில் செயலாற்றிவரும் காரித்தாஸ் மையம் தன் 40ம் ஆண்டு நிறைவை, நவம்பர் 29, இவ்வெள்ளியன்று, சிறப்பிக்கும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மையத்திற்கு, வெள்ளி மாலை 4 மணியளவில் செல்கிறார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இந்த மையத்தில் அமைந்துள்ள பல் மருத்துவ மையத்தை முதலில் பார்வையிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர் அங்குள்ள பல்பொருள் அங்காடி மற்றும், வீடற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு விடுதி ஆகியவற்றையும் பார்வையிடுகிறார்.

இறுதியில், உரோம் மறைமாவட்ட ஆயர் கர்தினால் Angelo De Donatis அவர்களுடன் இணைந்து, இந்த மையத்தில் பணியாற்றும் 200க்கும் அதிகமானோர் மற்றும் மையத்தில் தங்கியிருப்போரை, இந்த மையத்தின் அரங்கத்தில் சந்திக்கிறார், திருத்தந்தை.

திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், அவர்கள், உரோம் காரித்தாஸ் மையத்திற்கு, 1992ம் ஆண்டு, சென்றதையடுத்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இம்மையத்திற்கு 2007 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் இருமுறை சென்றுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, 2015ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, உரோம் காரித்தாஸ் மையத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தின் கதவுகளை, புனிதக் கதவுகளாக திறந்து வைத்து, திருப்பலி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2019, 15:02