தேடுதல்

Vatican News
பொலீவியா நாட்டில்  அரசியல் பதட்ட நிலைகள் பொலீவியா நாட்டில் அரசியல் பதட்ட நிலைகள்   (AFP or licensors)

தென் சூடான் மற்றும் பொலிவியா நாடுகளில் அமைதி நிலவ...

அமைதி நிலவும் என்று நம்பியிருக்கும் தென் சூடான் மக்களை, தான் அடுத்த ஆண்டு சென்று சந்திக்க விழைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமைதி ஒப்பந்தம் ஒன்று, கடந்த ஆண்டே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் ஆட்சி அமைக்க இயலாமல் திணறிக்கொண்டிருக்கும் தென் சூடான் நாட்டின் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 10, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின், தென் சூடான் நாட்டின் இன்றைய நிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.

அந்நாட்டில் நிலவிவரும் மோதல்கள் முற்றிலும் முடிவுக்கு வந்து, ஒளிமிக்க எதிர்காலமும், நிலையான அமைதியும் நிலவும் என்று நம்பியிருக்கும் தென் சூடான் மக்களை, தான் அடுத்த ஆண்டு சென்று சந்திக்க விழைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார்.

தான் தனிப்பட்ட முறையில் சிறப்பு அக்கறை கொண்டுள்ள தென் சூடான் நாட்டிற்காக செபிக்குமாறு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோரிடம் விண்ணப்பித்தத் திருத்தந்தை, அரசியல் பதட்ட நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொலீவியா நாட்டிற்காகவும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 20ம் தேதி, தென் அமெரிக்காவின் பொலீவியா நாட்டில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து, அங்கு அரசியல் பதட்ட நிலைகள் உருவாகியுள்ளன.

10 November 2019, 12:30