'அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் முதலாளித்துவம்’ என்ற அவையின் அங்கத்தினர்கள் 'அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் முதலாளித்துவம்’ என்ற அவையின் அங்கத்தினர்கள் 

அனைவரையும் உள்ளடக்கும் பொருளாதார அமைப்பு முறைகள் உருவாக்கப்பட

தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஒவ்வொருவருக்கும் வழங்குவதாக பொருளாதார அமைப்புமுறைகள் இருக்கவேண்டும் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனிதாபிமானமிக்க பொருளாதாரத்தை ஊக்குவித்து, ஏழ்மையை ஒழிக்க, உலக அளவில் முயற்சிக்கவேண்டும் என, தன்னை சந்திக்க வந்திருந்த குழுவிடம், இத்திங்களன்று காலை அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் முதலாளித்துவம்’ என்ற அவையின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும், அதேவேளை, அனைவரையும் உள்ளடக்கும் பொருளாதார அமைப்பு முறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

இவ்வுலகின் வளங்களை அனைவரும் பயன்படுத்தவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஒவ்வொருவருக்கும் வழங்குவதாகவும் பொருளாதார அமைப்புமுறைகள் இருக்க வேண்டும் எனக் கூறினார் திருத்தந்தை.

மனிதரின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாக முதலாளித்துவம் இருக்கவேண்டும் எனில், ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கும் உலக வளங்கள், அனைவருக்கும் கிடைக்க வழிசெய்ய வேண்டும் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பயன்படுத்தி, தூக்கியெறியும் ஒரு கலாச்சாரம் என்பது, சமூக நீதியற்ற ஒழுங்குமுறைகளாலும், நன்னெறியற்ற நிலைகளாலும் பிறக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வுடன் கூடிய பிறரன்பின் முக்கியத்துவத்தை தன் உரையில் வலியுறுத்தினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2019, 15:39