தேடுதல்

புதன் பொது மறைக்கல்வியுரை 091019 புதன் பொது மறைக்கல்வியுரை 091019 

அமேசான் மாமன்றம்: ஈக்குவதோர் நாட்டிற்காக செபம்

அமேசானில் காட்டுத் தீ, மரங்கள் வெட்டப்படுதல், சட்டவிரோத பயிர்த்தொழில், ஊழல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, பொதுவான நம் இல்லத்திற்கு ஆபத்து

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாம் மற்றவரோடு போரிடாமல் இருப்பதற்கு நமக்குக் கற்றுத்தரும்படி, ஆண்டவரிடம் மன்றாடுவோம் என, அக்டோபர் 09, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#UdienzaGenerale) டன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஆண்டவரே, நாங்கள் மக்களோடு சண்டையிடாமல் இருப்பதற்கு எமக்குக் கற்றுத்தாரும் என அவரிடம் வேண்டுவோம், தீமை, மற்றவர்களுக்கு எதிராகச் போரிடத் தூண்டாமல், அவர்களைச் சந்திப்பதை விரும்புவதாக அமையட்டும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

அமேசான் மாமன்றம்

மேலும், வத்திக்கானில், அக்டோபர் 09, இப்புதன் காலை 9 மணிக்குத் துவங்கிய, அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஐந்தாவது பொது அமர்வில், ஈக்குவதோர் நாட்டிற்காக, மாமன்றத் தந்தையர் செபித்தனர். இதில் 174 மாமன்றத் தந்தையர் கலந்துகொண்டனர்.

தென் மெரிக்க நாடான ஈக்குவதோரில் பாராளுமன்ற கட்டடத்திற்குப் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளதையும் தவிர்த்து, இச்செவ்வாயன்று அக்கட்டடத்திற்குள், போராட்டதாரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, அந்நாட்டு அரசுத்தலைவர் Lenín Moreno அவர்கள், அரசு கட்டடங்களுக்கு அருகில், இரவில் ஊரடங்குச் சட்டத்தை அறிவித்துள்ளார். ஈக்குவதோரில், கடந்த வியாழனிலிருந்து, பெட்ரோல் விலை நூறு விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளதையடுத்து போராட்டம் துவங்கியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

இன்னும், 2007ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற, பிரேசில் நாட்டு Carlos Alfonso Nobre, பிரேசில் நாட்டு தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவையின் உறுப்பினர் Ima Célia Guimarães Vieira, பிரேசில் ஆயர் Erwin Kräutler, திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் Paolo Ruffini, தகவல் தொடர்பு குழுவின் செயலர் இயேசு சபை அருள்பணி Giacomo Costa ஆகியோர் இப்புதனன்று நடைபெற்ற அமேசான் ஆயர்கள் மாமன்றத்தின் ஐந்தாவது பொது அமர்வு பற்றி செய்தியாளர் சந்திப்பில் விளக்கினர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆறாவது பொது அமர்வில், இப்புதன் மாலையில் கலந்துகொள்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2019, 15:25