தேடுதல்

Vatican News
அமேசான் பகுதி மக்களுடன் வத்திக்கானில் திருத்தந்தை அமேசான் பகுதி மக்களுடன் வத்திக்கானில் திருத்தந்தை 

திருத்தந்தையின் கண்களில், இதயத்தில் அமேசான்

“திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகளைக் கண்டுபிடிக்க” என்ற தலைப்பில் துவங்கியுள்ள ஆயர்கள் மாமன்றம், அக்டோபர் 27ம் தேதி நிறைவடையும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

பளுவான சிலுவைகளைச் சுமக்கின்ற மற்றும், நற்செய்தியின் விடுதலையளிக்கும் ஆறுதலுக்காகவும், திருஅவையின் அன்புநிறைந்த பராமரிப்புக்காகவும் ஆவலோடு காத்திருக்கின்ற, அமேசானில் வாழ்கின்ற நம் சகோதரர், சகோதரிகளை நினைவுபடுத்தி, அவர்களுக்காக, அவர்களோடு ஒன்றுசேர்ந்து நாம் பயணிப்போம் என்று அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் பேரவையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமேசான் பற்றிய டுவிட்டர்

மேலும், “நற்செய்திக்குச் சான்று பகரும் வழிகளை எப்போதும் காட்டுகின்ற தூய ஆவியாருக்குப் பணிவு மற்றும், உடன்பிறப்பு குழும உணர்வை அனுபவிக்கும்பொருட்டு, இந்த முக்கியமான திருஅவை நிகழ்வில், செபங்களோடு எம்முடன் ஒன்றித்திருங்கள்” என்ற டுவிட்டர் செய்தியையும், ஹாஸ்டாக்(#SinodoAmazonico) குடன், இத்திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், Rosh Ha-Shanah, Yom Kippur மற்றும், Sukkot யூத மத விழாவுக்கென, உரோம் யூதமத ரபி Riccardo Di Segni அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றையும் திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

07 October 2019, 16:04