புதன் பொது மறைக்கல்வி உரையில் கலந்துகொண்ட அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வி உரையில் கலந்துகொண்ட அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருஅவையில் செயலாற்றும் நாயகன், தூய ஆவியார்

"நாம் இறைவனின் தூண்டுதல்களை உணரும் திறன் பெற்றவர்களாகவும், நம் உடன்பிறந்தோரை வரவேற்கவும், திறந்த மனம் கொண்டிருக்க, தூய ஆவியாரை மன்றாடுவோம்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மறைபரப்புப்பணி மாதமாக சிறப்பிக்கப்படும் அக்டோபர் மாதம், மற்றும், புதன் மறைக்கல்வி உரை, என்ற இரு எண்ணங்களை வெளிப்படுத்தும் 'ஹாஷ்டாக்'குகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 30, இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"திருஅவைப் பணியில், செயலாற்றும் நாயகனாக விளங்குவது தூய ஆவியார்: அவரே, நற்செய்திப் பணியாளர்கள் பின்பற்றவேண்டிய பாதையில் அவர்களை வழிநடத்துகிறார். நாம் இறைவனின் தூண்டுதல்களை உணரும் திறன் பெற்றவர்களாகவும், நம் உடன்பிறந்தோரை வரவேற்கவும், திறந்த மனம் கொண்டிருக்க, தூய ஆவியாரை மன்றாடுவோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாகப் பதிவாகியிருந்தன.

டுவிட்டர் செய்திகள், இன்றளவும்...

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

அக்டோபர் 30, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,177 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

Instagram பதிவுகள்

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 780 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 63 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2019, 15:14