தேடுதல்

Vatican News
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1978, அக்டோபர் 22ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருப்பலி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1978, அக்டோபர் 22ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருப்பலி 

புனித திருத்தந்தையின் அழைப்பை நினைவில் கொள்க

புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் தன் வார்த்தையாலும், செயலாலும், புனிதத்துவத்தாலும் ஆற்றியுள்ள அனைத்து நன்மைகளுக்காக நன்றி கூறுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் திருவிழா இச்செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி அத்திருத்தந்தைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்ற அழைப்புடன்  டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் தன் வார்த்தையாலும், செயலாலும், புனிதத்துவத்தாலும், நம் இதயங்களிலும், இவ்வுலகிலும் ஆற்றியுள்ள அனைத்து நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இறைவனுக்கு கதவுகளைத் திறங்கள் என்று அத்திருத்தந்தை விடுத்த அழைப்பை எப்போதும் நாம் நினைவில் கொள்வோம்', என்று திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1978ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக, அவரது திருவிழா, ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 22ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

1920ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி போலந்தில் பிறந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், திருத்தந்தையாக பொறுப்பேற்று, ஏறத்தாழ 27 ஆண்டுகள் திரு அவையை வழி நடத்தியபின், 20005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

இவர், 2011ம் ஆண்டில்,  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால்,  அருளாளராகவும், 2014ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், புனிதராகவும் அறிவிக்கப்பட்டார்.

22 October 2019, 16:27