தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செப உரைக்கு செவிமடுக்க வந்த திருப்பயணிகள் - 201019 திருத்தந்தையின் மூவேளை செப உரைக்கு செவிமடுக்க வந்த திருப்பயணிகள் - 201019  (ANSA)

மறைபரப்புப் பணியில் செபத்தின் தேவை

கடவுளின் வார்த்தையை அறிவிப்பதில் ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணமும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது மடலில் உரைக்கும் இறுதி அறிவுரையை மையமாக வைத்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலியின் இரண்டாம் வாசகத்தில் காணப்படும் புனித பவுலின் அறிவுரைகளாகிய, 'கண்டித்து பேசு, கடிந்துகொள், அறிவுரை கூறு, மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு' என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துத் துறைகளிலும் கவனமாக இருந்து, பொறுப்புடன் நற்செய்தி அறிவிக்க புனித பவுல் வழியுறுத்துவது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்துவதாக உள்ளது என கூறினார்.

கடவுளின் வார்த்தையை அறிவிப்பதில் ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணத்துடன் செயல்படுவதையும், திருமுழுக்குப் பெற்ற அனைவரின் ஒத்துழைப்பையும் நாம் இஞ்ஞாயிறு கொண்டாடும் மறைபரப்புப்பணி ஞாயிறு எதிர்பார்க்கிறது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நூறாண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், மறைபரப்புப்பணியின் கடமையை வலியுறுத்தி வெளியிட்ட செய்தி இன்றும் ஏற்புடையதாக இருக்கிறது என்றார்.

அதிகார மோதல்கள் போருக்கு வித்திடுவதால் துன்பங்களை அனுபவித்துவரும் இன்றைய உலகில், கருணை, அன்பு, நம்பிக்கை, உடன்பிறந்தநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய இயேசுவின் அமைதிச் செய்தியை அறிவிக்கவேண்டிய ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையை வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைபரப்புப்பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு, செபத்தின் தேவையையும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை.

20 October 2019, 12:40