தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 161019 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 161019  (AFP or licensors)

தீமையிலிருந்து ஆண்டவர் உங்களை எப்போதும் பாதுகாப்பாராக

அக்டோபர் 18, வருகிற வெள்ளியன்று, நற்செய்தியாளர் புனித லூக்காவின் விழாவைச் சிறப்பிக்கின்றோம். அவர், இயேசுவின் இதய அன்பையும், அவரின் இரக்கத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்டோபர் 16, இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், நோயாளர், வயது முதிர்ந்தோர், புதிதாகத் திருமண வாழ்வைத் துவங்கியுள்ளோர் உட்பட எல்லா தரப்பினரையும் வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். நாளை மறுநாள், அதாவது, அக்டோபர் 18, வருகிற வெள்ளியன்று, நற்செய்தியாளர் புனித லூக்காவின் விழாவைச் சிறப்பிக்கின்றோம். அவர், இயேசுவின் இதய அன்பையும், அவரின் இரக்கத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆண்டவரின் நன்மைத்தனத்திற்குச் சாட்சிகளாக,   கிறிஸ்தவர்களாக இருப்பதன் மகிழ்வைக் கண்டுணர்வதற்கு, இவ்விழா நம் அனைவருக்கும் உதவுவதாக என்று கூறினார், திருத்தந்தை.

மேலும், ஈராக், சிரியா, மற்றும், மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை அரபு மொழியில் வாழ்த்தியபோது, தன்னலத்தோடு வாழ்பவர் எல்லாரின் மனங்களையும் ஆண்டவர் ஒளிரச்செய்யுமாறு செபிப்போம். அதன் வழியாக, கடவுள் அனைவரின் மீட்பை விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்வார்களாக. தீய செயல்களிலிருந்து ஆண்டவர் உங்களை எப்போதும் பாதுகாப்பாராக என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறி ஆசீர்வதித்தார்

16 October 2019, 14:51