திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய புதிய நூல் - "காயப்பட்ட மேய்ப்பர்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கத்தோலிக்கத் திருஅவையை மனமாற்றம் பெறச் செய்வதற்கு அவரது போராட்டமும்" திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய புதிய நூல் - "காயப்பட்ட மேய்ப்பர்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கத்தோலிக்கத் திருஅவையை மனமாற்றம் பெறச் செய்வதற்கு அவரது போராட்டமும்" 

"காயப்பட்ட மேய்ப்பர்" திருத்தந்தையைக் குறித்து புதிய நூல்

Austen Ivereigh என்ற எழுத்தாளர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் குறித்து எழுதியுள்ள இரண்டாவது நூல், "காயப்பட்ட மேய்ப்பர்", நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்க எழுத்தாளரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை 2014ம் ஆண்டு வெளியிட்டவருமான Austen Ivereigh அவர்கள், திருத்தந்தையைக் குறித்து எழுதியுள்ள மற்றொரு நூல், நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"காயப்பட்ட மேய்ப்பர்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கத்தோலிக்கத் திருஅவையை மனமாற்றம் பெறச் செய்வதற்கு அவரது போராட்டமும்" (“Wounded Shepherd: Pope Francis and His Struggle to Convert the Catholic Church”) என்ற தலைப்பில் வெளியாகும் இந்நூல், வத்திக்கானில் மாற்றங்களைக் கொணர்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பற்றி கூறுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை ஒரு வெற்றிக்களிப்புடன் கூறுவதற்குப் பதில், அவர் சந்தித்துவரும் போராட்டங்களைக் குறிப்பதற்கு, "காயப்பட்ட மேய்ப்பர்" என்று இந்நூலுக்கு தலைப்பு வழங்கியதாக, இந்நூலின் ஆசிரியர், Ivereigh அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பேரில், சாந்தா மார்த்தா இல்லத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில், அவர் தன்னுடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று, Ivereigh அவர்கள் கூறினார்.

2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின், "பெரும் மாற்றத்தை உருவாக்குபவர்: பிரான்சிஸ் அவர்களும், அடிப்படையில் வேறுபட்ட ஒரு திருத்தந்தையின் உருவாக்கமும்" ("The Great Reformer: Francis and the Making of a Radical Pope") என்ற தலைப்பில் Austen Ivereigh அவர்கள், ஒரு நூலை, 2014ம் ஆண்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2019, 15:40