தேடுதல்

மியான்மாரில் உலக அமைதி நாள் மியான்மாரில் உலக அமைதி நாள் 

திருத்தந்தை - அமைதிக்கு, இதய மனமாற்றம் அவசியம்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையின் அறிவிப்பின்படி, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் தேதி, ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில், அமைதி நிலவுவதற்கு, ஒவ்வொருவரின் இதயத்திலும் ஆன்மாவிலும் மாற்றம் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 21, இச்சனிக்கிழமையன்று, கடைப்பிடிக்கப்பட்ட உலக அமைதி நாளை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#PeaceDay) குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையின் அறிவிப்பின்படி, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் தேதி, ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாள் 1981ம் ஆண்டிலிருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆயினும், 2002ம் ஆண்டு முதல், இந்த உலக அமைதி நாள், செப்டம்பர் 21ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அல்பானோவில் திருத்தந்தை

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 21, இச்சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் இத்தாலியின் அல்பானோ சென்று, அந்நகர் பேராலய வளாகத்தில் மாலை 6 மணிக்கு திருப்பலி நிறைவேற்றுகின்றார்.

மத்திய இத்தாலியில், உரோம் நகருக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில், அல்பான் குன்றுகளின் மீது அமைந்துள்ள அல்பான் நகரத்தைச் சுற்றி, காஸ்தெல் கந்தோல்ஃபோ, ரோக்கா தி பாப்பா, அரிச்சா மற்றும், அர்தெயா நகராட்சிகளும் அமைந்துள்ளன. காஸ்தெல் கந்தோல்ஃபோவில், திருத்தந்தையரின் கோடை விடுமுறை மாளிகை உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2019, 16:22