தேடுதல்

வறியோர்க்கு உதவி வறியோர்க்கு உதவி 

வீடரற்ற ஏழைகளுக்கு உணவு சமைத்து வழங்கும் கைதிகள்

வத்திக்கானைச் சுற்றி வாழ்கின்ற வீடற்ற வறியோர்க்கு, முன்னாள் கைதிகள், மற்றும், வீட்டுக்காவலில் இருப்போர் உணவு வழங்குகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பணியாளர்கள் நெருக்கமாய் இருக்கவேண்டியவை எவை என, திருத்தூதர் பவுலடிகளார், இளைஞரான ஆயர் திமொத்தேயுவுக்கு கூறுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஆயர்கள் கடவுளுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும், செபத்தில் நிலைத்திருக்க வேண்டும், அருள்பணியாளர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும், அருள்பணியாளர்கள், ஒருவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும், இறைமக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.

கைதிகள் ஏழைகளுக்கு உணவு

மேலும், செப்டம்பர் 20, இவ்வெள்ளி இரவு 9 மணியளவில், Isola Solidale அரசு-சாரா அமைப்பில் வாழ்கின்ற முன்னாள் கைதிகள், மற்றும், வீட்டுக்காவலில் இருப்போர், வத்திக்கானைச் சுற்றி வாழ்கின்ற வீடற்ற வறியோர்க்கு, உணவு வழங்குகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் பசிலிக்காவை நோக்கியுள்ள Conciliazione சாலையில், இறைமீட்பர் தன்னார்வலர் அமைப்புடன் இணைந்து, இக்கைதிகள், நாற்பது உணவுப் பொட்டலங்களை வழங்குகின்றர். கோழிக்கறி, காய்கறிகள் உட்பட ருசியான உணவை, கைதிகள் தயாரித்து  வழங்குகின்றனர். கடந்த பிப்ரவரி முதல், இந்த புதிய அனுபவம் கைதிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இக்கைதிகளில் சிலர், நீதிபதியிடம் அனுமதிபெற்று இந்த சாலைக்கு உணவு வழங்க வருகின்றனர்.

Isola Solidale என்ற அரசு-சாரா அமைப்பு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, குடும்பங்கள் இல்லாத முன்னாள் கைதிகளை வரவேற்று, அவர்கள் சமுதாயத்தில் மீண்டும் ஒன்றிணைய உதவி வருகிறது. பணப்பிரச்சனை உள்ள முன்னாள் கைதிகள் மற்றும், வீட்டுக்காவலில் உள்ளவர்களுக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2019, 15:46