சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்களுடன் திருத்தந்தை சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்களுடன் திருத்தந்தை  

அத் லிமினாவில் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்கள்

இந்த உலகில் இருளுள்ள இடத்தில் ஒளியை, அவநம்பிக்கை ஆட்சிசெய்யும் இடத்தில் நம்பிக்கையை, மற்றும், பாவம் சூழ்ந்துள்ள இடத்தில் மீட்பை வழங்குவதற்கு, நாம் கடவுளின் இரக்கத்தின் சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

நாம் கடவுளின் இரக்கத்தின் தூதர்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

“இந்த உலகில் இருளுள்ள இடத்தில் ஒளியையும், அவநம்பிக்கை ஆட்சிசெய்யும் இடத்தில் நம்பிக்கையையும், பாவம் சூழ்ந்துள்ள இடத்தில் மீட்பையும் வழங்குவதற்காக, நாம் கடவுளின் இரக்கத்தின் சாட்சிகளாகவும், தூதர்களாகவும் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 23, இத்திங்களன்று, தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அத் லிமினா

மேலும், அத் லிமினா சந்திப்பையொட்டி, கேரளாவின் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்கள், இத்திங்கள் காலை பத்து மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இன்னும், நியு யார்க் ஐ.நா. நிறுவன தலைமையகத்தில் இத்திங்களன்று துவங்கியுள்ள காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் ஐ.நா. உலக உச்சி மாநாட்டிற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். நேர்மை, கடமையுணர்வு, துணிவு ஆகிய மூன்று மாபெரும் மனிதப் பண்புகளில், மனித சமுதாயம் வளரவேண்டியுள்ளது என்று, திருத்தந்தை அதில் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2019, 15:46