தேடுதல்

அன்னை மரியா திரு உருவம் முன்பு அன்னை மரியா திரு உருவம் முன்பு 

செப்டம்பர் 12, மரியாவின் திருப்பெயர் விழா

மரியாவின் திருப்பெயர் விழாவை, 1684ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் கிளமென்ட் அவர்கள், உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மரியாவின் திருப்பெயர் விழாவான செப்டம்பர் 12, இவ்வியாழனன்று, இவ்விழாவை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

“இன்று மரியாவின் புனிதப் பெயரின் விழாவைச் சிறப்பிக்கிறோம். ஒவ்வொருவரையும், நம் அன்னையிடம் செல்லுமாறு அழைக்கிறேன். நாம் கிறிஸ்தவ கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க அந்த அன்னை தூண்டுதலாய் இருப்பாராக. அதன் வழியாக, நாம், அன்னையைப் போல் வாழ்ந்து, அவரது திருமகன் இயேசுவை என்றென்றும் பின்பற்ற இயலும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மரியாவின் திருப்பெயர் விழாவை, 1684ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் கிளமென்ட் அவர்கள், உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார். பின்னர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க திருவழிபாட்டுச் சீர்திருத்தத்தில் இவ்விழா நீக்கப்பட்டது. 2002ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், மீண்டும் அவ்விழாவை நாள்காட்டியில் சேர்த்தார்.

வயது முதிர்ந்தவர்கள்

மேலும், வயது முதிர்ந்தவர்கள் அனுபவிக்கும் அனைத்து மனித உரிமைகள் என்ற தலைப்பில், ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 42 அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பற்றிய திருப்பீடத்தின் கருத்துக்களை, அந்த அமர்வில் வெளிப்படுத்தினார், பேராயர் இவான் யர்க்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகள் மற்றும், பன்னாட்டு அமைப்புகளில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் யர்க்கோவிச் அவர்கள், போர்கள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும், அவசரகாலச் சூழல்களில் அதிகம் பாதிக்கப்படுவோர், வயதானவர்கள் என்று கூறினார்.

அச்சமயங்களில் வயதானவர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகின்றது என்றும், பேராயர் யர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2019, 16:08