தேடுதல்

காலணி அணியாத அகுஸ்தீன் துறவு சபையினருடன் திருத்தந்தை காலணி அணியாத அகுஸ்தீன் துறவு சபையினருடன் திருத்தந்தை 

மரபுகளுக்கு பிரமாணிக்கம், வருங்காலத்திற்கு உறுதி

காலணி அணியாத அகுஸ்தீன் துறவு சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ 200 பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

செப்டம்பர் 12, இவ்வியாழனன்று திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் தன்னை சந்திக்க வந்திருந்த, காலணி அணியாத அகுஸ்தீன் துறவு சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும்  ஏறத்தாழ 200 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையின் தனிவரம் மற்றும், அச்சபையினர் இக்காலத்தில் வாழ வேண்டிய முறை குறித்த தன் எண்ணங்களை எடுத்துச் சொன்னார்.

சபையின் வேர்களிலிருந்து விலகி, நவீனத்தைப் பின்பற்றுவது, தற்கொலையாகும் என்றுரைத்த திருத்தந்தை, நம் காலத்து மக்களிடம் பேசும்முறையில், உண்மையான கிறிஸ்தவ சான்று விளங்க வேண்டும், ஆனால் அது இன்று, அதற்கு மாறாகச் சென்று கொண்டிருக்கின்றது, உண்மையான கிறிஸ்தவ சான்று வாழ்வு வாழ, தாழ்மையும், பிறரன்பும் தேவைப்படுகின்றன என்று கூறினார்.

நவீனத்தோடு இருக்க வேண்டும் என்ற உணர்வில், சபை ஆரம்பிக்கப்பட்ட வேர்களிலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ளைமல், நம் காலத்து மக்களின் இதயத்தைத் தொடும்வண்ணம் அவர்களோடு பேசி, உண்மையான கிறிஸ்தவத்திற்குச் சான்று வழங்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த சான்று வாழ்வுக்கு செபமும், தவமும், அதோடு, தாழ்ச்சியும், பிறரன்பும் அடிப்படையானது எனவும் கூறினார்.

புனித அகுஸ்தீன் துவங்கிவைத்த துறவற வாழ்வின் வேர்கள் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவைக் கவர்ந்திழுக்கும் வகையில், அவரது திருசொற்களின்படி வாழ வேண்டும் எனவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2019, 16:01