மொசாம்பிக் நாட்டில் திருத்தந்தையின் முதல் உரை மொசாம்பிக் நாட்டில் திருத்தந்தையின் முதல் உரை 

மொசாம்பிக் நாட்டில் திருத்தந்தையின் முதல் உரை

இளையோர் எவரும் கைவிடப்பட்டதாக உணராத நிலைக்குத் தேவையான கட்டமைப்புகளை உறுதிப்படுத்த உங்களை ஊக்குவிக்கிறேன் - மொசாம்பிக்கில் திருத்தந்தை

விக்டர்தாஸ்-வத்திக்கான்

அரசுத்தலைவர் அவர்களே,

இடாய் மற்றும் கென்னத் கடும்புயல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதலில் என் ஆறுதலையும் உடனிருப்பையும் தெரிவித்துக்கொள்ள  விரும்புகிறேன்.  உங்கள் வேதனையிலும் துன்பத்திலும் எனது தனிப்பட்ட பங்கேற்பையும், இந்த மிகவும் கடினமான சூழலின்போது பதிலளித்த கத்தோலிக்க சமுதாயத்தின் அர்ப்பணிப்பையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அமைதியை மீண்டும் உறுதிப்படுத்த அனைத்துலக சமுதாயத்தினால் அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எனது தனிப்பட்ட நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு நாடாக நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் சவால்களையும் வெற்றிகொள்ள சிறந்த பாதை நல்லிணக்கம்.

நீங்கள் துன்பம், துக்கம் மற்றும் துயரத்தை அனுபவித்திருக்கிறீர்கள். இந்த ஆண்டுகளில், நீடித்த அமைதியைப் பின்தொடர்வது எப்படி என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அமைதி என்பது, போர் இல்லா நிலை மட்டுமல்ல, மாறாக, அயராத அர்ப்பணிப்பு, நமது சகோதர சகோதரிகளின் மாண்பை அங்கீகரிப்பது, பாதுகாப்பது மற்றும், உறுதியான முறையில் மீட்டெடுப்பதாகும்.  

மொசாம்பிக்கின் வளர்ச்சியை, அமைதி பல பகுதிகளில் சாத்தியமாக்கியுள்ளது. உங்கள் முயற்சிகளைத் தொடர, குறிப்பாக உங்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியைக் கொண்ட இளையோர் யாரும் கைவிடப்பட்டதாக உணராத நிலைக்குத் தேவையான கட்டமைப்புகளை உறுதிப்படுத்த உங்களை ஊக்குவிக்கிறேன்.

உங்கள் நாட்டின் உண்மையான செல்வத்தை மற்றவர்களின் சேவையில், குறிப்பாக ஏழைகளின் சேவையில் காணலாம். நீங்கள் மேற்கொள்ள ஒரு துணிச்சலான வரலாற்று பணி உள்ளது. கல்விபெற வாய்ப்பற்ற சிறார் மற்றும் இளையோர், வீடற்ற குடும்பங்கள், வேலையில்லாத தொழிலாளர்கள், விவசாயம் செய்ய நிலம் இல்லாத விவசாயிகள் இருக்கும்வரை, நீங்கள் இப்பணியை கைவிடக்கூடாது. நம்பிக்கையின் எதிர்காலத்திற்கான அடித்தளங்கள் இவை, ஏனென்றால், அது மாண்பின் எதிர்காலமாக இருக்கும்! இவை அமைதியின் ஆயுதங்கள்.

நமது பொதுவான இல்லமான பூமியை உற்றுநோக்க அமைதி நம்மை அழைக்கிறது. இந்த நிலைப்பாட்டில், மொசாம்பிக் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நாடு, இந்த ஆசீர்வாதத்தை கவனித்துக்கொள்வது உங்களுக்கு உள்ள ஒரு சிறப்பு பொறுப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2019, 16:28