தேடுதல்

Vatican News
'எல்லைகளற்ற அமைதி’ என்ற தலைப்பில் இடம்பெற்ற, அமைதிக்கான செபக்  கூட்டத்தில் 'எல்லைகளற்ற அமைதி’ என்ற தலைப்பில் இடம்பெற்ற, அமைதிக்கான செபக் கூட்டத்தில்  (ANSA)

அமைதி எனும் கொடை இழக்கப்படுவதையே காண்கிறோம்

ஒவ்வொரு நகருக்கும் திருப்பயணியாகச் சென்று அமைதியின் விதைகளை விதைத்து வரும், இஸ்பெயினின் மத்ரித் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  :  வத்திக்கான் செய்திகள்

1986ம் ஆண்டு அக்டோபர் மாதம் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் துவக்கப்பட்ட அமைதிக்கான உலக செப நாள், ஒவ்வோர் ஆண்டும் இஸ்பெயின் நாட்டின் தலைநகரில் சிறப்பிக்கப்படுவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டு சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்பெயினின் மத்ரித் நகரில் இஞ்ஞாயிறு முதல் செவ்வாய் வரை மூன்று நாட்களுக்கு, 'எல்லைகளற்ற அமைதி’ என்ற தலைப்பில் இடம்பெற்ற, அமைதிக்கான செப நாட்களுக்கு தன் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, இந்த  33வது அமைதி செபக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கும், மத்ரித் உயர்மறைமாவட்டத்திற்கும் தன் நன்றியை அதில் வெளியிட்டுள்ளார்.

அமைதிக்கான செப நாளை முன்னிட்டு மத்ரித் திருஅவை, அசிசி உணர்வுடன் ஒவ்வொரு நகருக்கும் திருப்பயணியாகச் சென்று அமைதியின் விதைகளை விதைத்து வருவது பற்றி தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பேச்சுவார்த்தைகள், மற்றும், சந்திப்புக்கள் வழியாக அமைதியை வளர்க்கவேண்டிய சூழலில் இருக்கும் நாம், தடுப்புச் சுவர்கள் கட்டப்படுவதையும், எல்லைகள் மூடப்படுவதையும், அமைதி எனும் கொடை இழக்கப்படுவதையுமே கண்டு வருகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் நம் இதயத்திலிருக்கும் தடைகளை அகற்றி, நம்மைப் பிரிக்கும் கூறுகளையும் அகற்ற உழைக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

16 September 2019, 18:28