மொசாம்பிக்கில் இயேசு சபையினருடன் திருத்தந்தை மொசாம்பிக்கில் இயேசு சபையினருடன் திருத்தந்தை 

திருத்தந்தை : ஒன்றிப்பிலும், ஒப்புரவிலும் வாழுங்கள்

இம்மாதம் 4ம் தேதி முதல் 10 வரை மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும், மொரீஷியஸ் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 5ம் தேதி, மப்புத்தோ திருப்பீட தூதரகத்தில் இயேசு சபையினரைச் சந்தித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஒன்றிப்பிலும், ஒப்புரவிலும் வாழுங்கள் மற்றும், பிரிவினையை ஏற்படுத்த ஒருபோதும் முயற்சி எடுக்காதீர்கள், ஏனெனில், நாம் முழு மனித சமுதாயத்தைச் சேர்ந்த மனிதர்கள் என்று, ஆப்ரிக்க இயேசு சபையினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதத்தில், மொசாம்பிக் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, 20 பேர், சிம்பாப்வே நாட்டிலிருந்து 3 பேர், போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என, 24 இயேசு சபையினரைச் சந்தித்த, வட்டமாக அமருங்கள் என முதலில் சொல்லி, நீங்கள் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன் என்று, அச்சந்திப்பைத் தொடங்கினார், திருத்தந்தை.

Beiraவில் பணியாற்றும் அருள்பணி Paul Mayeresa அவர்கள், இயேசு சபையின் அப்போஸ்தலத்துவம் மற்றும், அதை மொசாம்பிக் நாட்டில் எவ்வாறு வாழ்வது என்பதற்கு ஆலோசனை கூறுங்கள் என்று உரையாடலைத் தொடங்கி வைத்தார்.

அக்கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, பிளவுபட்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது எளிதல்ல என்றும், உள்நாட்டுப் போரின் பாதிப்புக்களை அனுபவித்துள்ள மொசாம்பிக் நாட்டில் நீங்கள் வாழ்கின்றீர்கள், புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பயிற்சிகள் இதற்கு மிகவும் உதவும் என, தான் நினைப்பதாகக் கூறினார்.

ஆன்மீகத் தேர்ந்து தெளிதல் அனுபவம் இதற்கு உதவும், மேலும், மக்களை, ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடைபெற்ற திருத்தந்தையின் இச்சந்திப்பு மற்றும், அதில் இடம்பெற்ற கலந்துரையாடல்களை, இயேசு சபையினரின் La Civilta Cattolica இதழ் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

2014ம் ஆண்டு டிசம்பரில் மொசாம்பிக்-சிம்பாப்வே இயேசு சபை மாநிலம் உருவானது. இதிலுள்ள 163 பேரில்,90 பேர் இளம் இயேசு சபை பயிற்சியாளர்கள். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2019, 15:33