திருத்தந்தையுடன் மால்ட்டா அரசுத் தலைவர் ஜார்ஜ் வெல்லா திருத்தந்தையுடன் மால்ட்டா அரசுத் தலைவர் ஜார்ஜ் வெல்லா 

திருத்தந்தையுடன் மால்ட்டா அரசுத் தலைவர் சந்திப்பு

அகதிகளுக்கும் குடிபெயர்வோருக்கும் உதவுவதில் மால்ட்டா திருஅவையின் பணிகள் பாராட்டுக்குரியவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  :  வத்திக்கான் செய்திகள்

இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார் மால்ட்டா நாட்டு அரசுத் தலைவர் ஜார்ஜ் வெல்லா.

திருத்தந்தையுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப்பின் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீடத்தின் வெளிவிவகாரத் துறையின் நேரடிச் செயலர், அருள்பணி அந்துவான் கமில்லேரி அவர்களையும் சந்தித்து உரையாடினார் மால்ட்டா அரசுத்தலைவர்.

வத்திக்கானுக்கும் மால்ட்டாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் கல்விப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறும் திருப்பீட அறிக்கை, தற்போது மால்ட்டா நாடு சந்தித்துவரும் சில பிரச்னைகள் குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கிறது.

ஐரோப்பாவிற்குள் நுழைய விரும்புவோர் மால்ட்டா வழியாக வருவது, சுற்றுச்சூழல் பிரசனை ஆகியவையும் பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றன. அகதிகளுக்கும் குடிபெயர்வோருக்கும் உதவுவதில் திருஅவையும் மால்ட்டா அரசும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2019, 17:08