மடகாஸ்கரில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு மடகாஸ்கரில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு 

மடகாஸ்கரில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு

இன்னல்கள் நிறைந்த நேரங்களில், கடவுளைப் புகழ்ந்தால் அவற்றைத் தாங்குவதற்கு சக்தி கிடைக்கும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

செப்டம்பர் 08, இஞ்ஞாயிறு மாலையில், மடகாஸ்கர் நாட்டின் Antananarivoநகர் புனித மிக்கேல் கல்லூரியில் அந்நாட்டு அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோரை, சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இக்கல்லூரி,  1888ம் ஆண்டில், பிரெஞ்ச் இயேசு சபை மறைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்ட இக்கல்லூரி, அப்பகுதியில் உயர் கல்விக்குச் சிறந்த இடமாக விளங்குகிறது. அன்புச் சகோதரர், சகோதரிகளே, எனக்கு முன்னால் இந்த மேஜையை இங்கு கொண்டுவரும்போது, சாப்பிடுவதற்கென நினைத்தேன், ஆனால் அப்படி இல்லை, பேசுவதற்கு என்று, திருத்தந்தை தன் உரையைத் தொடங்கியவுடன் எல்லாரும் கைதட்டி சிரித்தார்கள். உங்களின் அமோக வரவேற்பிற்கு நன்றி. உடல்நலம், பல ஆண்டுகளாக உழைத்து களைத்த சுமை, அல்லது சில வசதிகள் இல்லாமையால், இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கின்ற அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோரை முதலில் நினைக்கின்றேன். அவர்கள் எல்லாருக்காகவும் சிறிதுநேரம் அமைதியாகச் செபிப்போம். இவ்வாறு சொல்லி, தனது உரையைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். மடகாஸ்கர் நாட்டில் திருத்தந்தையின் இறுதிப் பயணத்திட்ட நிகழ்வு இதுவாகும். இந்நாட்டில் 35 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.  

இந்திய ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினா நிகழ்வு, மூன்று குழுக்களாக, செப்டம்பர் 13,16, 23 ஆகிய தேதிகளில் இடம்பெறும். வருகிற அக்டோபர் மாதம் 3ம் தேதி, இந்திய சீரோ மலபார் வழிபாட்டுமுறை ஆயர்கள் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2019, 16:25