தேடுதல்

மொராக்கோ நாட்டு பெண்களை சந்தித்த திருத்தந்தை மொராக்கோ நாட்டு பெண்களை சந்தித்த திருத்தந்தை 

மனிதநேயமிக்க துணிச்சலான பெண்களை நினைவுகூர்வோம்

2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, பாக்தாத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி Sergio Vieira de Mello அவர்கள் நினைவாக, உலக மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கடும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு உதவி செய்கின்ற, நெஞ்சுரமுள்ள பெண்களை, மனிதநேய உலக நாளான, ஆகஸ்ட் 19, இத்திங்களன்று நினைவுகூர்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மனிதாபிமானப் பணியாற்றும் பெண்களை, நன்றியுடன் வாழ்த்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐ.நா. நிறுவனம், மனித நேய உலக நாளை, ஹாக்ஸ்டாக்குடன், (#WomenHumanitarians) இத்திங்களன்று கடைப்பிடித்தவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் டுவிட்டர் செய்தியை, ஹாக்ஸ்டாக்குடன், இத்தகைய பெண்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

“இன்னல்களை எதிர்கொள்ளும் நம் சகோதரர், சகோதரிகளை நாடிச்சென்று, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற, துணிச்சல்மிக்க பெண்களை இன்று நினைவுகூர்கிறோம், அவர்கள் ஒவ்வொருவரும், கடவுளின் அருகாமை மற்றும், அவரின் பரிவன்பின் அடையாளமாக உள்ளார்கள்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், ஹாக்ஸ்டாக் (#WomenHumanitarians) குடன் வெளியானது.  

2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக்கின் பாக்தாத்திலுள்ள, ஐ.நா. தூதரகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, ஈராக்கில், ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றிய Sergio Vieira de Mello அவர்கள் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19ம் நாள், உலக மனிதநேய நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அல்கொய்தா அமைப்பு, வாகனத்தில் குண்டுகளை வைத்து நடத்திய மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலில்,  பிரேசில் நாட்டவரான, 55 வயது நிரம்பிய செர்ஜோ அவர்கள் உட்பட, 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். செர்ஜோ அவர்கள், ஐ.நா. நிறுவனத்தில், 34 ஆண்டுகளுக்கும்மேல் முக்கிய பணிகள் ஆற்றியவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2019, 15:20