தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 210819 புதன் மறைக்கல்வியுரை 210819 

ஏழைகளின் தேவைகளுக்கு நம் இதயங்களை திறப்போம்

ஆகஸ்ட் 21, இப்புதன் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகள், 2,086. அவற்றை ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தாங்களும் மனிதர்களாக அங்கீகரிக்கப்படும் ஆவலில், நம் கதவுகளைத் தட்டும் ஏழைகளின் தேவைகளுக்கு நம் இதயங்களைத் திறப்போம் என்று, ஆகஸ்ட் 22, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 22, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், “ஏழைகள், பாதுகாப்பற்றவர்கள், தன்னை ஒரு மனிதராக ஏற்குமாறு, நம் கதவைத் தட்டுவோர் போன்ற எல்லாரின் தேவைகளுக்கு, ஆண்டவர் நம் இதயங்களைத் திறப்பாராக” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளியிடப்படும் புகைப்படங்கள், மற்றும், காணொளிகள் அடங்கிய instagram தளத்தில், அவர், ஆகஸ்ட் 21, இப்புதனன்று, புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பொது மறைக்கல்வியுரை புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததன் ஆறாம் ஆண்டு நினைவையொட்டி, திருத்தந்தை  நிறைவேற்றிய திருப்பலியின் புகைப்படங்கள் உட்பட, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் இன்ஸ்டகிராம் தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 750 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2019, 14:56