நோயுற்றோரை சந்தித்த திருத்தந்தை நோயுற்றோரை சந்தித்த திருத்தந்தை 

ஆண்டவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார்

நிச்சயமற்ற ஒரு நிலையை நாம் உணர்கையில், நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற ஓர் உறுதியை, ஆண்டவர் நமக்கு வழங்குகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வில் நிச்சயமற்ற, ஒரு சூழலை எதிர்கொள்ளும்வேளையில், இறைவன் நமக்கு ஓர் உறுதியைத் தருகிறார் என்று, உடைந்த மனதிற்கு ஆறுதலளிக்கும் சொற்களை, ஆகஸ்ட் 20, இச்செவ்வயான்று, தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“உள்ளும் புறமும், நிச்சயமற்ற ஒரு நிலையை நாம் உணர்கையில், நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற ஓர் உறுதியை, ஆண்டவர் நமக்கு வழங்குகிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

திருத்தந்தையின் மடல்

மேலும், புனித ஜான் மரிய வியான்னி இறைபதம் அடைந்த 160ம் ஆண்டை முன்னிட்டு, உலகிலுள்ள அனைத்து அருள்பணியாளர்களுக்குமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எழுதிய ஏழாயிரத்திற்கு அதிகமான சொற்களைக் கொண்ட மடலுக்கு, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், ஒஸ்ஸெர்வாத்தோரே ரொமானோ வத்திக்கான் நாளிதழில், தங்கள் எண்ணங்களை பதிவுசெய்துள்ளனர்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட அருள்பணி சந்தோஷ் குமார் திகல் அவர்கள் கூறுகையில், திருத்தந்தையின் இம்மடல், விசுவாசம், மற்றும், உடன்பிறப்பு அன்புணர்வின் மாபெரும் ஊற்றாகவும், நம்பிக்கை, மற்றும் ஊக்கத்தை அளிப்பதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வியட்நாமைச் சேர்ந்த அருள்பணி Dominic Ngo Quang Tuyen அவர்கள் கூறுகையில், திருத்தந்தை, தன்னை, ஒரு நண்பராக, ஆசிரியராக மற்றும் தந்தையாக வெளிப்படுத்தியிருக்கிறார், நண்பராக, அருள்பணியாளர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பதை, நேர்மையாகக் குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2019, 15:16