தேடுதல்

Vatican News
இளையோருடன் திருத்தந்தை இளையோருடன் திருத்தந்தை  

இளையோர் கனவு காண உதவும் கல்வி

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி ஐ.நா. அவையால் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி ஐ.நா. அவையால் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

உயரிய மகிமைக்கு தன்னைத் திறக்கும் விடியல்களைக் கொண்ட கல்வி, இளையோர் கனவு காண்பதற்கும், அழகு நிறைந்த உலகை உருவாக்கவும் உதவுகிறது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியிடப்பட்டன.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி, 'எளிமைத்தன்மையில் நம்மை முற்றிலுமாக ஒப்படைத்து, இறைவிருப்பத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்து  விளக்குகளை எரியும்படிச் செய்யவேண்டும் என இந்நாளின் நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது.  அவ்வாறு செய்வதன் வழியாக இரவின் இருளை நம்மால் ஒளியூட்ட முடியும். என்ற சொற்களை, தன் ஞாயிறு டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

12 August 2019, 15:28