தேடுதல்

“சமுதாய இயக்கங்களின் தோற்றம்: நம் காலத்து ரேரும் நோவாரும்” என்ற நூல் “சமுதாய இயக்கங்களின் தோற்றம்: நம் காலத்து ரேரும் நோவாரும்” என்ற நூல் 

சமுதாய இயக்கங்களுக்கு திருத்தந்தை ஆதரவு

சமுதாயத்தின் விளிம்பிலுள்ள மக்கள், சமுதாயநல உதவிகளை அமைதியுடன் பெற்றுச் செல்பவர்கள் அல்ல, ஆனால், அவர்கள், தங்களின் வருங்காலத்தை அமைக்கும் செயல்திறனுள்ள முன்னணியாளர்கள் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்– வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் வாழ்கின்ற மக்கள், வெறும் மக்களைக்கொண்ட ஒரு பிரிவு அல்ல, மாறாக, கடுகு விதை போன்று தளிர்விட்டு வளர்ந்து மிகுந்த பலன்களைக் கொடுப்பவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் கூறியுள்ளார்.

“சமுதாய இயக்கங்களின் தோற்றம்: நம் காலத்து ரேரும் நோவாரும்” என்ற தலைப்பில், இலத்தீன் அமெரிக்காவுக்கான பாப்பிறை அவை தயாரித்து, வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புதிய நூலுக்கு, முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் வாழ்கின்ற மக்களின் பிரிதிநிதிகளாகச் செயல்படும் இந்த இயக்கங்கள், மிக ஆழமான சமுதாய மாற்றத்திற்கு நெம்புகோலாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்மக்கள், கடின உழைப்பு மற்றும் துன்பங்கள் வழியாக, பணத்தின் கொடூரத்தை, எதிர்த்துப் போராடும் முறை, சமுதாய இயக்கங்கள், நல்லதோர் வருங்காலத்தின் காவலாளர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன என்றும், இஸ்பானிய மொழியில், வெளியிடப்பட்டுள்ள அந்த நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், திருத்தந்தை கூறியுள்ளார்.

இன்றைய சமுதாயம், அச்சம், அந்நியர் மீது வெறுப்பு மற்றும், இனவெறியுள்ள சூழலை எதிர்கொண்டு வருகிறது என்றும், சமுதாய இயக்கங்களால், இத்தகைய போக்கிற்கு எதிராகச் செயல்பட முடியும், ஏனெனில், அவை, தங்கள் சனநாயகங்களை உயிர்த்துடிப்புள்ளதாக்குவதற்கு, அறநெறி சக்தியின் ஊற்றுகளாக உள்ளன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.

சமுதாய இயக்கங்கள் என்பவை, தெருக்களில் விற்பனை செய்பவர்கள், மீனவர்கள், விவசாயிகள், மறுசுழற்சிக்காக குப்பை மேடுகளில் பொருள்களைத் திரட்டுகிறவர்கள் போன்ற எளிமையான மக்கள் கொண்ட அரசு-சாரா அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இவை, இலத்தீன் அமெரிக்காவில், பிரபலமடைந்துள்ளன.

மேலும், திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், 1891ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, மூலதனம் மற்றும் தொழிலின் உரிமைகள் மற்றும், கடமைகளை வலியுறுத்தும், Rerum Novarum என்ற திருமடலை வெளியிட்டார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2019, 15:25