தேடுதல்

ஜப்பான் பேரரசர் Naruhito ஜப்பான் பேரரசர் Naruhito  

ஜப்பான் பேரரசர் முடிசூட்டு நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதி

இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிறந்த முதல் பேரரசராகிய Naruhito அவர்கள், தன் பெற்றோர்களால் இந்நிலைக்கு உயர்த்தப்படும் முதல் பேரரசருமாவார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஜப்பான் பேரரசர் Naruhito அவர்கள், அந்நாட்டின் மரபுப்படி முடிசூட்டப்படும் விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, கர்தினால் Francesco Monterisi அவர்கள் கலந்துகொள்வார் என, ஆகஸ்ட் 10, இச்சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் நகரிலுள்ள பாப்பிறையின் புனித பவுல் பசிலிக்காவின் முன்னாள் அதிபராகிய கர்தினால் Monterisi அவர்கள், டோக்கியோவில் அரசு அரங்கத்தில், வருகிற அக்டோபர் 22ம் தேதி நிகழும் முடிசூட்டு விழாவில், திருத்தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொள்வார்.

ஜப்பான் பேரரசர் Akihito அவர்கள், முதிர்ந்த வயது காரணமாக, கடந்த ஏப்ரல் 30ம் தேதி பிற்பகலில் நடந்த நிகழ்வில், அரச பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து, தனது வாரிசாக, மூத்த மகன் இளவரசர் Naruhito அவர்களை அறிவித்தார்.

அதற்கு அடுத்த நாளான  மே முதல் தேதி, 59 வயது நிரம்பிய Naruhito அவர்களும், பேரரசராகப் பணியைத் தொடங்கினார்.

பேரரசர் Naruhito அவர்கள், ஜப்பான் மரபுப்படி, வருகிற அக்டோபர் 22ம் தேதி, 126வது பேரரசராக, முடிசூட்டப்படவுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2019, 15:44