தேடுதல்

இத்தாலிய கூட்டுறவு சங்கங்கள் சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய கூட்டுறவு சங்கங்கள் சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ்  

தொழிலின் மாண்பைக் காக்கும் நிறுவனங்கள் அவசியம்

உலகிலுள்ள மொத்த தொழிலாளரில், ஏறத்தாழ பத்து விழுக்காடு, அதாவது, 27 கோடியே 90 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தொழிலாளரின் மாண்பு, தொழிலின் மாண்பு, இப்பூமியின் நலன் ஆகியவற்றுக்கு அனைவரும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, இச்சனிக்கிழமையன்று, கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 06, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, கூட்டுறவு சங்கங்களின் உலக நாளை முன்னிட்டு, “ஹாஸ்டாக் (#CoopsDay)” குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “தொழிலாளர்களின் மாண்பு, தொழிலின் மாண்பு, மற்றும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் நலனைப் பாதுகாக்கும், மக்களும், நிறுவனங்களும் நமக்குத் தேவைப்படுகின்றனர்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

“தரமான வேலை: தொழிலின் மாண்புக்காக கூட்டுறவு சங்கங்கள் (Coops4decentwork: International Day)” என்ற தலைப்பில், ஜூலை 06, இச்சனிக்கிழமையன்று, கூட்டுறவு சங்கங்களின் நாள், உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும், வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படவும், தரமான தொழிலை ஊக்குவிக்கவும், கூட்டுறவு சங்கங்கள் உதவ வேண்டும் என்று, உலக கூட்டுறவு சங்கங்கள் அமைப்பின் தலைவர் Ariel Guarco அவர்கள், இந்த உலக நாளில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சங்கங்களின் உறுப்பினர்கள், தங்களின் பங்கேற்பு வழியாக, தங்களின், சமுதாயங்களின் மற்றும், உலகின் வாழ்வை மாற்றியமைக்கும் இலக்கினைக் கொண்டிருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார், Ariel Guarco.

உலகிலுள்ள மொத்த தொழிலாளரில், ஏறத்தாழ பத்து விழுக்காடு, அதாவது, 27 கோடியே 90 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன, கூட்டுறவு சங்கங்கள் என்று, உலக கூட்டுறவு சங்கங்கள் அமைப்பின் அண்மை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2019, 14:44