தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் திருத்தந்தையுடன் இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின்  (Vatican Media)

திருத்தந்தையைச் சந்தித்த இரஷ்ய அரசுத்தலைவர்

இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஜூலை 4, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஜூலை 4, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இரஷ்ய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன், உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரே வத்திக்கானுக்கு, நண்பகல் 1-15 மணிக்கு வருகை தரவேண்டிய அரசுத்தலைவர் புடின் அவர்கள், 45 நிமிடங்கள் தாமதமாக, பிற்பகல் 2 மணியளவில் வந்து சேர்ந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் மூன்றாவது முறையாக, இவ்வியாழனன்று சந்தித்து,  உரையாடியுள்ள இரஷ்ய அரசுத்தலைவர் புடின் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார்.

இரஷ்ய அரசுத்தலைவராக, 2000மாம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு முடியவும், பின்னர், 4 ஆண்டுகள் பிரதமராகவும், அதன்பின், 2012ம் ஆண்டு முதல் இன்றளவும், மீண்டும் அந்நாட்டின் அரசுத்தலைவராகவும் பணியாற்றிவரும் விளாடிமிர் புடின் அவர்கள், ஜூலை 4, இவ்வியாழனன்று 6வது முறையாக வத்திக்கானுக்கு வருகை தந்துள்ளார்.

04 July 2019, 15:11