தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது - 140719 மூவேளை செப உரையின்போது - 140719  (� Vatican Media)

துன்புறும் மக்களுடன் திருத்தந்தையின் அருகாமை

மக்களின் துயர்நிலைகளை அகற்றுவதற்கு, நல்லதொரு தீர்வைக் கொணரும் பொறுப்பிலுள்ள அனைத்து தரப்பினருக்காகவும் செபிக்க திருத்தந்தை அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வெனிசுவேலா நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடிகளால் துன்புறும் அந்நாட்டு மக்களோடு தன் அருகாமையை வெளியிடுவதாக இஞ்ஞாயிறன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்களின் பிறரன்பு குறித்து எடுத்துரைத்த இஞ்ஞாயிறு  மூவேளை செப உரையின் இறுதியில், வெனிசுவேலா நாட்டின் துன்பநிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்கள், மற்றும், அப்பகுதியில் உள்ள ஏனைய நாடுகளில் வாழும் மக்களின் நலனை மனதில் கொண்டு, நல்ல முடிவுகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மக்களின் துயர்நிலைகளை அகற்றுவதற்கு நல்லதொரு தீர்வைக் கொணரும் பொறுப்பிலுள்ள அனைத்து தரப்பினரையும் இறைவன் தூண்டி, அவர்களுக்கு ஒளியூட்ட வேண்டும் என நாம் அனைவரும் செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இதே கருத்தை வலியுறுத்தி, இஞ்ஞாயிறன்று டுவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

14 July 2019, 13:14