புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மூவேளை செப உரை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மூவேளை செப உரை 

நாம் இறைவனுடன் ஒரு குழந்தையைப்போல் உரையாட முடியும்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, என்ற செபத்தில் நாம் கேட்கும் அனைத்தும், நமக்கு இறைமகன் வழியாக உரிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன, ஆயினும், நமக்கு வழங்கப்படுவதை கரங்களை விரித்துப் பெற்றுக்கொள்வது நம் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற செபத்தின் வழியாக, நாம் இறைவனுடன் ஒரு குழந்தையைப்போல் உரையாடமுடியும் என்பதை, இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார் என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செவிமடுத்தல் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வினால் ஊக்கமளிக்கப்பட்டு, நம்பிக்கையின் அடிப்படையில், அன்புகூரும் மக்களிடையே இடம்பெறும் உரையாடலே செபம் என்பது கிறிஸ்தவ விந்தை என்றும், தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையே இடம்பெறும் உரையாடலே அது எனவும் எடுத்துரைத்தார்.

இறைவனின் தந்தைத் தன்மையை நாம் ஒவ்வொருவரும் நம் இதயங்களில் உணரவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இறைவனிடம் விளக்கத்தை எதிர்பார்க்கும்போது, ஒரு மூன்று வயது சிறுவனிடம் தந்தை உரையாடுவதுபோல், அவரும் நம்மை நோக்கி தன் பார்வையைத் திருப்புவார் எனக்கூறினார்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, என்ற செபத்தில் நாம் கேட்கும் அனைத்தும், நமக்கு இறைமகன் வழியாக உரிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன, ஆயினும், நமக்கு வழங்கப்படுவதை, கரங்களை விரித்துப் பெற்றுக்கொள்வது நம் கடமை எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தந்தையின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதன் வழியாகவே, ஒவ்வொரு குழந்தையும், பாதுகாப்பற்ற நிலையை வெற்றிகொள்கிறது என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2019, 13:00