தேடுதல்

Vatican News
உகாண்டாவில் SECAM 50ம் ஆண்டு கொண்டாட்ட துவக்கம் உகாண்டாவில் SECAM 50ம் ஆண்டு கொண்டாட்ட துவக்கம்  

SECAM அமைப்பின் பொன்விழாவுக்கு திருத்தந்தை வாழ்த்து

ஆப்ரிக்க நாடுகளின் தலத்திருஅவைகள் ஒன்றிணைந்து உழைக்கும் நோக்கத்துடன் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப்பின் உருவாக்கப்பட்ட SECAM என்ற ஆப்ரிக்க ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பு, 1969ம் ஆண்டு துவக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கரின் ஆயர் பேரவைகள், ஒருவர் ஒருவருடன் இணைந்து உழைப்பதற்கென, SECAM என்ற அமைப்பு துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

உகாண்டாவில் இடம்பெறும் SECAM அமைப்பின் 50வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் குறித்து, திருத்தந்தை மகிழ்ச்சியடைகிறார் என்றும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், திருஅவை அதிகாரிகள் மறைபரப்பு சீடத்துவத்தில் இன்னும் உறுதிபெற செபிப்பதாகவும், இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 21 இஞ்ஞாயிறு முதல், 28, வருகிற ஞாயிறு முடிய உகாண்டாவில் நடைபெறும் இந்த பொன்விழா கருத்தரங்கிற்கு தலைமை வகிக்கும், SECAM அமைப்பின் தலைவர், பேராயர் Gabriel Mbilingi அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆப்ரிக்க நாடுகளின் தலத்திருஅவைகள் ஒன்றிணைந்து உழைக்கும் நோக்கத்துடன் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப்பின் உருவாக்கப்பட்ட SECAM என்ற ஆப்ரிக்க ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பு, 1969ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்த கூட்டமைப்பு உருவாக, 1968ம் ஆண்டு, தன் ஒப்புதலை வழங்கிய புனிதத் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1969ம் ஆண்டு, உகாண்டா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், SECAM கூட்டமைப்பின் முதல் கூட்டம், அத்திருத்தந்தையின் முன்னிலையில் கூடியது என்பதும், அந்நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவு தற்போது சிறப்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

22 July 2019, 15:19