தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செப உரையைக் கேட்க புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகள் திருத்தந்தையின் மூவேளை செப உரையைக் கேட்க புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகள்  (Vatican Media)

புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்புக்காக திருத்தந்தை விண்ணப்பம்

லிபியா கடல்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

லிபியா கடல்பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றி வந்த பெரிய படகு ஒன்று கவிழ்ந்ததில், நீரில் மூழ்கி பலர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்வோரின் பாதுகாப்பு மற்றும் மாண்பு குறித்து, அனைத்துலக சமுதாயத்திற்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், ஜூலை 28, இஞ்ஞாயிறு நண்பகலில் ஆற்றிய மூவேளை செப உரைக்குப்பின், இவ்விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை, மத்தியதரைக்கடலில் அண்மையில் இடம்பெற்ற இப்படகு விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து மிகுந்த மனவேதனையுற்றதாகவும், இத்தகைய உயிரிழப்புக்கள் மீண்டும் இடம்பெறாதவண்ணம் அனைத்துலக சமுதாயம், உரிய நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

இம்மாதம் 25ம் தேதி, 250 முதல் 300 புலம்பெயர்ந்தோருடன் லிபியாவிற்கு 5 மைல் தொலைவில், கடலில் மூழ்கிய பெரிய படகிலிருந்து, 147 பேரே காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், 150 பேர் வரை கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

28 July 2019, 13:15