தேடுதல்

Alba Iulia பேராயர், György-Miklós Jakubínyi அவர்கள் வழங்கிய நன்றியுரை Alba Iulia பேராயர், György-Miklós Jakubínyi அவர்கள் வழங்கிய நன்றியுரை 

Alba Iulia பேராயர் நன்றியரை

பழங்கால ஹங்கேரி கிறிஸ்தவம், உலகளாவியத் திருஅவைக்கு, பல புனிதர்களை வழங்கியுள்ளது மற்றும், பல நாடுகளின் பாதுகாவலர்களையும் உலகுக்கு வழங்கியுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

Şumuleu Ciuc அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், Alba Iulia பேராயர், György-Miklós Jakubínyi அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார்.

திருத்தந்தையே, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இந்த டிரான்சில்வேனியப் பகுதிக்கு வந்து திருப்பலி நிறைவேற்றி இருபது ஆண்டுகள் சென்று, தாங்கள் வந்துள்ளீர்கள். உலகளாவியத் திருஅவை வாழ்வில், நாங்களும் உயிரோட்டத்துடன் இணைய எமக்கு உதவிசெய்யும். திருத்தந்தையே, எங்களோடு சேர்ந்து செபிப்பதற்கும், திருப்பலி நிறைவேற்றுவதற்கும் வருகை தந்துள்ள தங்களுக்கு நன்றி சொல்கிறோம்.  “கடவுளே! எமது தூய விசுவாசத்திலும், எம் மூதாதையரின் புண்ணியங்களிலும் எம்மை வைத்து காத்தருளும்!” என, நேர்ச்சை சிலுவையில் எழுதப்பட்டிருப்பதுபோன்று எம்மை ஆசீர்வதியும் என, திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டார், Alba Iulia பேராயர். இத்திருப்பலியை நிறைவு செய்து, Sumuleu Ciucலுள்ள,  Jakab Antal Haz பேராயர் இல்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில், ஹங்கேரி நாட்டுப் புனிதர்கள் பற்றிய நூல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தது, அந்நாட்டு அரசு. இந்த அன்பளிப்பு பற்றி, தொலைக்காட்சி அலைவரிசையில் பேசிய ஹங்கேரி மனிதவளத்துறை அமைச்சர், Miklós Kásler அவர்கள், பழங்கால ஹங்கேரி கிறிஸ்தவம், உலகளாவியத் திருஅவைக்குப் பல வழிகளில் உதவியுள்ளது, பல புனிதர்களையும், நாடுகளின் பாதுகாவலர்களையும் உலகுக்கு வழங்கியுள்ளது என்ற செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்க விரும்பியே, இத்தாலியத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிரதியை திருத்தந்தைக்கு அளித்ததாகத் தெரிவித்தார். 

உலக பெற்றோர் நாள் ஜூன் 01

ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக பெற்றோர் நாளை, ஜூன் முதல் நாளாகிய இச்சனிக்கிழமையன்று கடைப்பிடித்தவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தனது டுவிட்டர் செய்தியில், அன்பு பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் இயேசுவின் அன்பைக் கண்டுணர உதவுங்கள். இது, பிள்ளைகளை, வலிமையும், துணிச்சலும் உள்ளவர்களாக ஆக்கும் என்ற வார்த்தைகளைப் பதிவு செய்திருந்தார். இஞ்ஞாயிறு மாலையில், ருமேனியத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து, அன்று இரவு 7 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 30வது திருத்தூதுப்பயணம் முற்றுப்பெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2019, 14:15