பங்களாதேஷ் நாட்டில் Rohingya இனத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் பங்களாதேஷ் நாட்டில் Rohingya இனத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

'#ஆண்டவரின் உடல்' மற்றும் '#புலம்பெயர்ந்தோருடன் இணைந்து'

"புலம்பெயர்ந்தோருடன் இணைந்து, நற்செய்தியின் வழியில், இன்னும் கூடுதலாக ஆதரவு வழங்கும் கிறிஸ்தவ சமுதாயத்தை கட்டியெழுப்ப, இறைவனின் பராமரிப்பு நமக்கு வாய்ப்பளிக்கிறது"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 20, இவ்வியாழனன்று, கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும், இரத்தமும் திருவிழா வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டர் செய்தியை, 'ஆண்டவரின் உடல்' என்று பொருள்படும் #CorpusDomini என்ற ‘ஹாஷ்டாக்’குடன் வெளியிட்டார்.

"இயேசு நமக்காக, உடைக்கப்பட்ட அப்பமாக மாறினார். நாம் இனி நமக்காக வாழாமல், ஒருவர் ஒருவருக்காக வாழும்வண்ணம், நம்மையே பிறருக்கு வழங்குமாறு அவர் கேட்கிறார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

அத்துடன், ஜூன் 20ம் தேதி, புலம்பெயர்ந்தோர் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, 'புலம்பெயர்ந்தோருடன் இணைந்து' என்ற பொருள்படும் #WithRefugees என்ற ‘ஹாஷ்டாக்’குடன், திருத்தந்தை, தன் 2வது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"புலம்பெயர்ந்தோருடன் இணைந்து, நற்செய்தியின் வழியில், இன்னும் கூடுதலாக ஆதரவு வழங்கும், இன்னும் கூடுதலாக உடன்பிறந்த உணர்வு கொண்ட, இன்னும் திறந்த மனம் கொண்ட கிறிஸ்தவ சமுதாயத்தை கட்டியெழுப்ப, இறைவனின் பராமரிப்பு நமக்கு வாய்ப்பளிக்கிறது" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 2வது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், ஜூன் 23, வருகிற ஞாயிறு, இத்தாலியிலும், உலகின் பல்வேறு தலத்திரு அவைகளிலும், கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும், இரத்தமும் திருவிழா சிறப்பிக்கப்படும் வேளையில், உரோம் நகருக்கு அருகே உள்ள காசல் பெர்தோனே (Casal Bertone) பகுதியில் அமைந்துள்ள ஆறுதல் வழங்கும் அன்னை மரியா (SANTA MARIA CONSOLATRICE) கோவிலில், மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிகழ்த்துவார் என்றும், பின்னர், அப்பகுதியின் பல்வேறு சாலைகள் வழியே நடைபெறும் திருநற்கருணை பவனியை முன்னின்று நடத்தி, இறுதியில், "Roma 6" என்ற திடலில் நற்கருணை ஆசீர் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2019, 14:24